News October 25, 2024
சென்னையில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள 2 ஓட்டல்களுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தி.நகரில் உள்ள (ரெஸிடென்சி, ராஜ் பார்க்) 2 ஓட்டல்களுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தி.நகர் போலீசார், விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய சோதனையில், வெறும் புரளி என தெரிய வந்தது. தொலைபேசி எண்ணை வைத்து யார் அந்த நபர் என்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
சென்னையில் அதிகரிக்கும் டெங்கு: 600 பேருக்கு பாதிப்பு

சென்னையில் பருவமழைக்குப் பிறகு டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. அக்டோபரில் 600 புதிய பாதிப்புகளுடன், இந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கை 1,633 ஆக உயர்ந்துள்ளதாக மாநகராட்சியின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது இயல்பான பருவகால உயர்வு என்பதால் மக்கள் பீதியடைய வேண்டாம். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News November 9, 2025
சென்னை: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <
News November 9, 2025
உயிர் காக்க உதவிய சென்னை மெட்ரோ

பெங்களூருவில் இருந்து, பயணிகள் விமானத்தில் இன்று (நவ-8) சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்ட நுரையீரலை, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல உதவி செய்தது சென்னை மெட்ரோ நிர்வாகம். அதன்படி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வந்ததும், தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு நுரையீரல் கொண்டு செல்லப்பட்டது.


