News October 25, 2024

நெல்லையில் ஆளுநர் பங்கேற்கும் விழா நேரடி ஒளிபரப்பு

image

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 31வது பட்டமளிப்பு விழா நாளை(26 ஆம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டம் அளிக்கிறார். இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்ய பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான இணையதள முகவரியை பல்கலைக்கழகம் இன்று(அக்.,25) வெளியிட்டுள்ளது.

Similar News

News October 21, 2025

நெல்லை: இன்று பிற்பகல் முதல் சிறப்பு பஸ்கள்

image

தீபாவளி பண்டிகைக்காக தமிழ்நாடு அரசு இன்று கூடுதலாக 1 நாள் விடுமுறை அளித்துள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு வந்தவர்கள் தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்டு வெளியூர் பணிகளுக்கு செல்வதற்காக இன்று மாலை முதல் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை கோவைக்கு தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும்.

News October 21, 2025

பழவூர் அருகே விபத்து; சிறுமி பலி

image

பழவர் அருகே டூவீலர் மீது நெல்லை மகாராஜபுரத்தைச் சேர்ந்த கிரீட்டா என்பவரது கார் இன்று மோதியதில் ஜோசப்(65) என்வரின் பேத்தி வர்ஷா(14) சம்பவ இடத்திலே பலியானார். தீபாவளி நாளில் பேத்தியை அழைத்து தோட்டத்திற்கு செல்லும் போது விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தீபாவளி நாளில் ஏற்பட்ட இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News October 21, 2025

நெல்லை: கேஸ் மானியம் பெற e-KYC முக்கியம் – APPLY!

image

நெல்லை மகக்ளே கேஸ் மானியம் வந்துகிட்டு இருந்தது வரலையா?? கேஸ் மானியம் பெறனுமா?? மத்திய அரசு e-KYC மூலம் ஆதார் எண் உங்கள் LPG கணக்குக்கும் இணைத்தவர்களுக்கு மட்டுமே கேஸ் மானியம் என நடைமுறை படுத்தி உள்ளது. கேஸ் மானியம் திரும்ப பெற வழி உண்டு! இங்கு<> க்ளிக்<<>> செய்து e-KYC உருவாக்கி அதில் ஆதார் எண்ணை இணைத்து கேஸ் மானியம் பெறுங்க… தடையின்றி மானியம் பெறவும் (e-KYC) யை சரிபாருங்க.. SHARE பண்ணுங்க..

error: Content is protected !!