News October 25, 2024

ரஜினி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

image

வேட்டையன் படத்திற்கு பிறகு கூலி படத்தில் நடிகர் ரஜினி நடித்து வந்தார். இடையே திடீரென உடல்நிலை பாதிக்கப்பட அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய ரஜினி, 2 வாரமாக ஓய்வு எடுத்து வந்தார். இதனால் கூலி பட சூட்டிங் தடைபட்டு இருந்தது. இந்நிலையில், சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு ரஜினி மீண்டும் நடித்தார்.

Similar News

News December 27, 2025

EPS-உடன் CM விவாதிக்க முடியாது: கனிமொழி

image

CM ஸ்டாலினுக்கு இருக்கும் வேலைப்பளுவில் EPS-உடன் விவாதிக்க முடியாது என MP கனிமொழி கூறியுள்ளார். நெல்லையில் பேசிய அவர், ஸ்டிக்கர் ஒட்டி பெருமை பெற்றவர் EPS, திமுகவில் இருக்கும் யாருடன் வேண்டுமானாலும் அவர் விவாதிக்கட்டும். அதையும் தாண்டி சில கேள்விகள் இருந்தால் அதற்கு CM பதிலளிப்பார் என்றார். முன்னதாக திமுக ஆட்சி பற்றி என்னோடு நேருக்கு நேர் விவாதம் நடத்த <<18685417>>தயாரா? என<<>> EPS சவால் விடுத்திருந்தார்.

News December 27, 2025

கணவரின் ஆணுறுப்பை அறுத்த மனைவி.. NEW UPDATE

image

கோவையில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி <<18678842>>கணவரின் ஆணுறுப்பை அறுத்த மனைவி<<>> கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் மது போதையில் பிரதான் இருந்தபோது, அவரது மனைவி ஜிந்தி இந்த கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளார். பிரதான் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தலைமறைவான ஜிந்தி தற்போது போலீசில் சிக்கியுள்ளார். அசாமைச் சேர்ந்த இந்த தம்பதி கோவையில் தங்கி பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

News December 27, 2025

உடைகிறது ‘Event Management’ முதல்வரின் பிம்பம்: TVK

image

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு, கோரிக்கைகளுக்காக போராடுபவர்களை ஒடுக்கி, அட்டூழியத்தில் ஈடுபடுவதாக TVK அருண்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களின் போராட்டங்களை நசுக்கும் செயல், அரசின் ‘விளம்பர மாடல்’ முகத்திரையை கிழித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ‘Event Management’ மூலம், தன்னை முன்னிறுத்தும் CM-ன் பிம்பம் உடைத்து எறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!