News October 25, 2024

சட்டம் அறிவோம்: BNS பிரிவு 196 (1) என்ன சொல்கிறது?

image

பிறந்த இடம், சாதி, மதம், இனம், மொழி, சமயம், வசிப்பிடம், பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிராக செயல் (அ) பேச்சு (அ) எழுத்தாலோ பகைமை, வெறுப்பு உணர்ச்சிகளை தூண்டி மற்றொரு மக்கள் குழுவை அணித்திரட்டுவது (அ) அமைதியின்மை ஏற்படுத்துவது BNS சட்டப் பிரிவு 196 (1)இன்படி குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை & அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

Similar News

News January 18, 2026

ஐரோப்பிய நாடுகளுக்கு 10% வரி விதித்த டிரம்ப்!

image

இங்கி., பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் மீது 10% வரி விதிக்க உள்ளதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். டென்மார்க் & ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பல ஆண்டுகளாக எந்த வரியையும் விதிக்கவில்லை என்றும், இந்நிலையில் கிரீன்லாந்தை கைப்பற்றும் ஒப்பந்தம் எட்டப்படும் வரை வரும் பிப்.1 முதல் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10% வரி விதிக்கப்படும் என கூறியுள்ளார்.

News January 18, 2026

மகன் திருமணத்திற்கு பின் எனக்கு திருமணம்: பார்த்திபன்

image

தனது மகனுக்கு ஒரு திருமணம் முடிந்துவிட்டால், அதன்பின் தனக்கென ஒரு துணையைத் தேடிக்கொள்ள நினைப்பதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். புதிய பாதை படத்தின் மூலம் இயக்குநர் & நாயகனாக அறிமுகமான பார்த்திபன், 1990-ல் நடிகை சீதாவை மணந்த நிலையில், கடந்த 2001-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இந்நிலையில், தனக்கான துணை ஒரு புரிதலான தோழியாகவோ அல்லது ஒரு சிறந்த கம்பெனியனாகவோ இருக்கலாம் என்று விவரித்துள்ளார்.

News January 18, 2026

ராசி பலன்கள் (18.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!