News October 25, 2024
பள்ளி மாணவி தற்கொலை: போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் ஜி.ஆர்.பி தெருவைச் சேர்ந்த தனுஸ்ரீ (14), பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News February 20, 2026
விழுப்புரம்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News February 20, 2026
விழுப்புரம்: தூக்கில் தொங்கிய பெண்!

மோனிஷா சிங்கப்பெருமாள்கோயிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நெடுங்கல் கிராமத்தில் கணவர் வீட்டில் இருந்து வந்த மோனிஷாவிடம் மாமனார் விநாகயம், மாமியார் காஞ்சனா மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் ரூ.1 லட்சம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தி வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டனர். இதனால், திண்டிவனம் சலவாதியில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த மோனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
News February 20, 2026
விழுப்புரம்: டிராக்டர் கவிழ்ந்து கோர விபத்து

விழுப்புரம், பாலப்பட்டு கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் விறகுகளை ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. திண்டிவனத்திலிருந்து நேற்று விறகுகளை ஏற்றுக்கொண்டு டிராக்டர் விக்கிரவாண்டி நோக்கி சென்றது. இதில் விபத்தில் காயமடைந்த டிராக்டர் டிரைவர் மணிகண்டன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


