News October 25, 2024
ஆவின் லாரியும் கலவை லாரியும் மோதி விபத்து

அண்ணாநகர் பகுதி புதிய ஆவடி சாலையில், இன்று அதிகாலை ஆவின் லாரியும் கலவை லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஆவின் லாரி ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து அண்ணாநகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Similar News
News October 25, 2025
சென்னையில் புகார் அளிக்க வாட்ஸ் ஆப் நம்பர்!

சென்னைவாசிகளே.., பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 25, 2025
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்றும்(அக்.25) அதே விலையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News October 25, 2025
சென்னை: ரயில்வே கேட்டரிங்கில் வேலை! APPLY NOW

சென்னை: வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. எந்த வித தேர்வுமின்றி இந்திய ரயில்வே கேட்டரிங்கில் ரூ.30,000 சம்பளத்தில் ’Hospitality Monitors’-ஆக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேர்காணல் மூலமாகவே ஆட்கள் தேர்வு நடைபெறும். இதுகுறித்து தகவல் அறிய, விண்ணப்ப படிவத்திற்கு <


