News October 25, 2024

2026இல் கூட்டணி ஆட்சிதான்: தமிழிசை

image

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இனி தனித்து நின்று வெற்றி பெற முடியாது என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 2026இல் நிச்சயம் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றார். மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்தாலும் ஆட்சியில் பங்கு கேட்போம் எனவும், திமுகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Similar News

News January 18, 2026

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (ஜன.18) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 18, 2026

விஜய்க்கு அபரிமித செல்வாக்கு உள்ளது: கிருஷ்ணசாமி

image

விஜய் மற்ற கட்சிகளின் ஓட்டுகளை பிரிப்பார் என்பதைவிட, அவரே ஒரு சக்தியாக மாறுவார் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். விஜய்யால் எவ்வளவு வாக்குகளை பெற முடியும் என்பதை கூற முடியவில்லை என்றாலும், அவர் அபரிமிதமான செல்வாக்குடன் இருக்கிறார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார். அவர் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகளை தூக்கி வீசினாலும், அது அவருக்கு சாதகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

News January 18, 2026

அடுத்த ஆபரேஷனை துவங்கிய இந்திய ராணுவம்!

image

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். கிஷ்வார் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) குழுவைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி இந்திய ராணுவம் ‘Operation Trashi-I’-ஐ தொடங்கியபோது, ​​நடந்த சண்டையில் 3 ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!