News October 25, 2024

அணையிலிருந்து வெளியேறிய ரசாயன நுரை

image

ஓசூர் அருகே அணையிலிருந்து வெளியேறிய ரசாயன நுரை, தட்டகானப்பள்ளி அருகே உள்ள ஆற்றின் தரைப்பாலத்தை மூழ்கடித்ததால், அதனை அகற்ற முடியாமல் திரும்பிய தீயணைப்புத் துறையினர். போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இன்று ரசாயன நுரை குறைந்ததை அடுத்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

Similar News

News October 28, 2025

கிருஷ்ணகிரி: நுகர்வோர் குறைதீர் கூட்டம் – ஆட்சியர் அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி: எரிவாயு உருளைகள் பதிவு, விநியோகம் மற்றும் புகார் தொடர்பான அக்டோபர் 2025 நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், வரும் வியாழக்கிழமை (அக்.31) மாலை 3:30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் நுகர்வோர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

News October 28, 2025

மழைக் காலங்களில் செய்ய வேண்டியவை – ஆட்சியர் அறிவுரை

image

கிருஷ்ணகிரி: மழைக்காலங்களில் செய்ய வேண்டியவை குறித்து மாவட்ட ஆட்சியர் சார்பில் விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பருகவும், அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும், தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும், மின்சாதன பொருட்களை கவனமாக கையாளவும், உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

News October 28, 2025

மழைக் காலங்களில் செய்ய கூடாதவை – ஆட்சியர் அறிவுரை

image

கிருஷ்ணகிரி: மழைக்காலங்களில் செய்யகூடாதவை குறித்து மாவட்ட ஆட்சியர் சார்பில் விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மின் மாற்றிகள் மற்றும் மின்கம்பங்கள் அருகே செல்ல வேண்டாம், மின் கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் மின்வாரியத்திற்கு தெரிவிக்கவும், இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, கணினி, செல்போன் மிக்சி, கிரைண்டரை பயன்படுத்த வேண்டாம் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!