News October 25, 2024

நீலகிரி மாவட்டத்தில் 12 இடங்கள் தேர்வு 

image

தமிழ்நாடு மலையேற்ற வழித்தடங்களில் நீலகிரி மாவட்டத்தில் 11 இடங்கள் தேர்வு செய்து இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கேர்ன்ஹில், லாங்வுட்சோலை, ஜீன்பூல், ரங்கசாமி சிகரம், போரிசிகரம், முக்குருத்தி, அவலாஞ்சி, அவலாஞ்சி சோலை, கோலாரிபெட்டா, தேவர்பெட்டா, நீடில்ராக் ஆகிய 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Similar News

News November 13, 2025

நீலகிரியில் சிக்கித் தவிக்கும் சிறுத்தை!

image

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே பந்தலூர் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட வேலி கம்பியில் இன்று ஒரு சிறுத்தை சிக்கியது. இந்நிலையில், சிறுத்தையை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி, அதனை பாதுகாப்பாக மீட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 13, 2025

கோத்தகிரி அருகே பரபரப்பு: அழுகிய நிலையில் புலி சடலம்!

image

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகில் உள்ள கடசோலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு, சில மீட்டர்கள் தொலைவில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில், புதிதாக தோண்டப்பட்ட கிணற்றுக்குள், புலியின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 13, 2025

நீலகிரி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய தகவல்!

image

நீலகிரி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. <>இங்கு கிளிக்<<>> செய்து Fill Enumeration Form -ஐ தேர்ந்தெடுத்து மொபைல் எண் (அ) வாக்காளர் எண் மூலம் நுழைந்து SIR படிவத்தை பூர்த்தி செய்து உங்க பெயரை வாக்காளர் பட்டியலில் சேருங்க. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!