News October 25, 2024

குழந்தைகளின் உடல் எடையைக் கூட்ட வேண்டுமா?

image

உடல் எடை குறைந்த குழந்தைகளுக்கு பொட்டுக்கடலை கஞ்சி கொடுக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பொட்டுக்கடலையில் புரதச்சத்து, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட் என ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. பொட்டுக்கடலையை சட்னியாக செய்து சாப்பிட செய்யலாம். தேங்காய் துருவிப் போட்டு முற்பகல் வேலையிலோ அல்லது மாலை நேரத்திலோ ஸ்நாக்ஸாகவும் கொடுக்கலாம் என்கிறார்கள்.

Similar News

News January 17, 2026

காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகை எங்கே? பாஜக

image

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என CM ஸ்டாலின் அறிவித்த நிலையில், பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதே திமுகவின் வழக்கம் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு மாதம் ₹1000 வழங்கப்படும் என திமுக கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை எனவும் அவர் சாடியுள்ளார். 5 ஆண்டுகளில் அவர்களுக்கு வழங்க வேண்டிய ₹60,000 எப்போது வருமென தெரியவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

News January 17, 2026

விஜய் கட்சியில் இணைந்த அடுத்த அதிமுக தலைவர்

image

அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட EX MLA புரசை V.S.பாபு தவெகவில் இணைந்துள்ளார். 2008 காலக்கட்டத்தில் திமுக மா.செ.வான புரசை வி.எஸ்.பாபு, அதிமுக மா.செ.வாக இருந்த சேகர்பாபுவை எதிர்த்து அரசியல் செய்தவர். 2011-ல் சேகர்பாபு திமுகவில் இணைந்ததால், வி.எஸ்.பாபு அதிமுகவுக்கு தாவினார். தற்போது மா.செ பதவி பறிக்கப்பட்டதால், செங்கோட்டையனுக்கு ஆதரவாக தவெகவில் ஐக்கியமாகி இருக்கிறார்.

News January 17, 2026

திங்கள்கிழமை.. வந்தாச்சு மகிழ்ச்சியான செய்தி

image

₹3,000 அடங்கிய தமிழக அரசின் பொங்கல் பரிசை இதுவரை 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுள்ளனர். ஆனால் பொங்கலுக்காக ஊருக்கு சென்றவர்கள் பொங்கல் பரிசை பெற முடியாமல் உள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை (ஜன.19) முதல் விடுபட்டவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும், மறுஅறிவிப்பு வரும் வரை பொங்கல் பரிசு விநியோகம் தொடரும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!