News March 18, 2024

இட்லி ரூ. 17 புரோட்டா ரூ. 55, தேர்தல் ஆணையம் அறிவிப்பு

image

மக்களவைத் தேர்தல் செலவுக்காக தமிழக அரசிடம் ரூ. 750 கோடி கேட்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ” வேட்பாளர்களின் தேர்தல் செலவு தொகை ரூ.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதைப்போல இட்லி ரூ. 17, புரோட்டா ரூ. 55 என மாவட்ட அளவில் உணவு பொருட்கள் செலவினத்திற்கான தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மாவட்டத்திற்கு மாவட்டம் மாற வாய்ப்புள்ளது” என்றார்.

Similar News

News November 1, 2025

உலகின் மிகவும் கஷ்டமான பரீட்சைகள் இவைதான்!

image

எக்ஸாம் என்றாலே நம்மில் பலருக்கும் கஷ்டம்தான். ஆனால், எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தாலும், பாஸ் பண்ணுவதற்கு மிகவும் கடினமான பரீட்சைகளும் உலகில் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி உலகின் டாப் 9 கடினமான பரீட்சைகளை கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்யுங்க. நீங்க எழுதிய கஷ்டமான எக்ஸாம் எது?

News November 1, 2025

BREAKING: செங்கோட்டையனை தொடர்ந்து அடுத்த நீக்கம்

image

EPS-க்கு எதிராக செங்கோட்டையன் கலகக்குரல் எழுப்பியதில் இருந்து அவருக்கு ஆதரவாக EX MP சத்யபாமா செயல்படுகிறார். அதுமட்டுமல்லாமல், பசும்பொன்னுக்கு சென்றபோது OPS- செங்கோட்டையனுடன் சத்யபாமாவும் உடனிருந்தார். அதேபோல், இன்று செங்கோட்டையன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் இடம்பெற்றுள்ளார். இதனால், செங்கோட்டையனை தொடர்ந்து, சத்யபாமாவும் கட்சியில் இருந்து நீக்கப்படவிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

News November 1, 2025

திமுகவுக்கு ஆதரவாக செங்கோட்டையன்: EPS

image

OPS, TTV அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அல்ல; நீக்கப்பட்டவர்கள் என EPS விளக்கமளித்துள்ளார். திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக OPS, TTV உடன் இணைந்து செங்கோட்டையன் சதி செய்தால் தலைமைக் கழகம் வேடிக்கை பார்க்குமா எனக் கேள்வி எழுப்பிய அவர், சிற்றரசர் போல் நடந்து கொண்ட அவரை நீக்கியதால், கோபியில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர் என தெரிவித்தார்.

error: Content is protected !!