News October 25, 2024
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள்,துணி, நகைக்கடைகள்,தொண்டு நிறுவனங்கள், கூட்டுறவுத்துறை சங்கம் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் புகார் அளிக்கும் வகையில் 4பேர் கொண்ட புகார் குழு 50 சதவீத பெண்கள் இடம்பெறும் வகையில் அமைக்க வேண்டும். தவறினால் ரூ50,000 அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை.
Similar News
News August 25, 2025
ஓசூர் விமான நிலையம்.. 2 வாரத்தில் குட் நியூஸ்

ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு இறுதி செய்துள்ளது. பெரிகை–பாகலூர் இடையே தேர்வு செய்யப்பட்ட இந்த தளம் TAAL ஓடுபாதையிலிருந்து 15.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அடுத்த 2 வாரங்களில் மாநில அரசு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி அனுமதி கோர உள்ளது. இதற்கிடையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் நிலம் கையகப்படுத்தல் முன்மொழிவை தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்க உள்ளார்.
News August 25, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

சென்னை தொழில்முனைவோர் மேம்பாடு & புதுமை நிறுவகம் (EDII-TN) சார்பில் பேக்கரி தயாரிப்பு பயிற்சி செப்டம்பர் 1 முதல் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை ஈக்காட்டுதாங்கல் EDII வளாகத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ஆர்வமுள்ள கிருஷ்ணகிரி மக்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். (மேலும் விவரங்களுக்கு 8072914694, 8668102600). ஷேர் பண்ணுங்க!
News August 25, 2025
கிருஷ்ணகிரி: +2 போதும், ரூ.81,100 சம்பளத்தில் வேலை!

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ஹெட் கான்ஸ்டபிள் பிரிவில் ரேடியோ ஆப்பரேட்டர், ரேடியோ மெக்கானிக் பதவிக்கு 1121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு +2 மற்றும் ITI படித்த 18 முதல் 25 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.25,500-81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 23ம் தேதிக்குள் <