News October 25, 2024
எருமை மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் பலி

கோவிலம்பாக்கம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணி புரிந்தவர் நூத்தஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மாறன் (33). இவர், நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் அடுத்த சாலவான்குப்பம் பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு பைக்கில் சென்றார். அப்போது, பட்டிபுலம் அருகே எருமை மாடு குறுக்கே வந்ததால் அதன் மீது பைக் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 13, 2025
செங்கல்பட்டில் 13,064 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

சென்னையை ஒட்டியுள்ள மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற & ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டில் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை செங்கல்பட்டில் 13,064 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் இல்லை. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்!
News August 13, 2025
செங்கல்பட்டில் நாளை கடைசி!

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினருக்கு 2 (PLA) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த நபர்கள் <
News August 12, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 12) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.