News October 25, 2024
சாத்தான்குளம் வழக்கை 4 மாதத்திற்குள் முடிக்க உத்தரவு

சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் கடந்த 2020 ஆண்டு ஜூன் 19ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் 2 பேரும் உயிரிழந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கை அடுத்த 4 மாதத்திற்குள் விசாரணை செய்து முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Similar News
News February 12, 2026
BREAKING: திருச்செந்தூர் மாசி தேரோட்டம் தேதி அறிவிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா பிப்ரவரி 21ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 4ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. மார்ச் 2ம் தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டமும், மார்ச் 3ம் தேதி தெப்ப உற்சவமும், பல்வேறு நாள்களில் சிவப்பு, வெள்ளை, பச்சை பட்டு உடுத்தி சப்பர வீதியுலாக்கள் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
News February 12, 2026
சமூகவலைதளத்தில் தூத்துக்குடி எம்.பி இரங்கல்

தமிழ்நாடு நாட்டுப்படகு மீனவர் சங்கத்தின் தலைவரும், உடன்குடி கிழக்கு ஒன்றியம் தி.மு.க மாவட்ட பிரதிநிதி திரு. ஜெயபிரகாஷ் அவர்களின் தந்தையாருமான திரு. எஸ்.ஜே.கயாஸ் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தூத்துக்குடி மாவட்ட எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
News February 12, 2026
தமிழ்நாடு நாட்டுப்படகு சங்கத் தலைவர் காலமானார்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மனப்பாடு மீனவ கிராமத்தில் நாட்டுபடகு சங்கத் தலைவர் மற்றும் சமுதாய தலைவரான கயாஸ் இன்று இயற்கை எய்தினார். அவரது நல்லடக்கம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். துக்கம் அனுசரிக்கும் விதமாக நாளை(பிப்.13) மீனவர் கிராமங்களில் யாரும் மிக பிடிக்கக் செல்ல மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


