News October 25, 2024
தேனி மாவட்டத்தில் 32 வீடுகள் மழையால் சேதம்

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக இம்மாத தொடக்கத்தில் இருந்து நேற்று(அக்.24) வரை மாவட்டத்தில் மொத்தம் 32 வீடுகள் சேதமடைந்துள்ளன. பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு அரசு பேரிடர் நிதியில் இருந்து தலா ரூ.4 ஆயிரம் வீதம் 19 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 24, 2025
தேனி: அரசு நிலத்தில் மணல் அள்ளிய 9 போ் மீது வழக்கு

போடி அருகே நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட அம்பரப்பா் மலைப் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் சிலா் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக வந்த தகவலையடுத்து போடி தாலுகா போலீஸாா் நேற்று (டிச.23) அங்கு சென்றனர். அங்கு ஜேசிபி, டிப்பர் லாரி மூலம் 9 பேர் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடிய நிலையில் வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை.
News December 24, 2025
தேனி: சினிமா பாணியில் மிளகாய் பொடி தூவி சென்ற திருடன்

மயிலாடும்பாறை இந்திரா நகரைச் சேர்ந்த ராணுவ வீரர் இந்தியன். இவரது மனைவி நிவேதா நேற்று காமயகவுண்டன்பட்டியில் உள்ள உறவினரின் நிகழ்ச்சிக்குச் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. மேலும், திருடிய நபர் வீட்டில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. மயிலாடும்பாறை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை.
News December 24, 2025
தேனி: வாகனம் மோதி பைக்கில் சென்றவர் படுகாயம்

கோடங்கிபட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (43). இவர் நேற்று முன்தினம் இரவு அவரது பைக்கில் போடிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அப்பொழுது அடையாளம் தெரியாத வாகனம் இவரது பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் சுரேஷ் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு (டிச.22) பதிவு செய்துள்ளனர்.


