News October 25, 2024
“தீபாவளிக்கு டாஸ்மாக் கடைகளை மூடவும்”

திமுக ஆட்சியில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது ஏமாற்று வேலை என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். கடந்த தீபாவளிக்கு ₹467 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டை விட, 20% கூடுதலாக விற்க இலக்கு நிர்ணயிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். இதனால், தீபாவளிக்கு முன்னும், பின்னும் 3 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News October 18, 2025
தீபாவளி ஸ்பெஷல் விளக்கு கோலங்கள்!

தீபாவளி திருநாளில் வீட்டு வாசலில் வண்ண விளக்கு கோலமிட்டு அதன் மீது தீபம் ஏற்றாவிடில் அன்றைய நாள் முழுமையடையாது. நீண்ட நேரம் எடுக்காமல், எளிதில் அரைமணி நேரத்திற்குள் போடக்கூடிய தீபாவளி ஸ்பெஷல் கோலங்கள் இங்கு போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. SWIPE செய்து பார்த்து, உங்களுக்கு பிடித்த கோலத்தை தேர்ந்தெடுத்து வீட்டு வாசலை கோலமிட்டு அலங்கரிக்கவும்..
News October 18, 2025
தீபாவளி நாளில் வெளியாகிறது கருப்பு First Single

RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இப்படத்தின் முதல் பாடல் தீபாவளியன்று (அக்.20) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி ரிலீஸாக கோதாவில் குதிக்க வேண்டிய இப்படம், சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில், தீபாவளி அன்று பாடல் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள மாஸ் பாடலை கேட்க ரெடியா?
News October 18, 2025
பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் பகிரங்க எச்சரிக்கை

லக்னோவில் உள்ள பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தயாரிப்பு பிரிவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளின் முதல் பேட்ஜை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பேசிய அவர், PAK-ன் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸின் வரம்பிற்குள் வந்துவிட்டடதாக கூறினார். ஆபரேஷன் சிந்தூர் ஒரு டிரெய்லர் மட்டுமே எனக்கூறிய அவர், இதுவே இந்தியாவின் சக்தியை பாகிஸ்தானுக்கு உணர்த்தியுள்ளதாக குறிப்பிட்டார்.