News October 25, 2024

புதுவை: முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

image

புதுச்சேரி அரசு செயலர் பங்கஜ்குமார் நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப்பணி துறையில், இளநிலை பொறியாளர் மற்றும் ஓவர்சீர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும், 27ஆம் தேதி, புதுச்சேரியில் 6 மையங்களில் நடக்கிறது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிந்து செய்வதோடு, பிற தேர்வுகளில் பங்கேற்க தடை விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

Similar News

News October 16, 2025

புதுவை: குடியரசு துணைத் தலைவரை சந்தித்த சபாநாயகர்

image

புது டெல்லி சென்றுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம், இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது புதுச்சேரி மாநில பாஜக தலைவர் வி.பி. ராமலிங்கம் மாநில செயலாளர் ஜெயக்குமார் ரெட்டியார் ஆண்டியார் பாளையம் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

News October 15, 2025

புதுவையில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

image

புதுவை, அரியாங்குப்பத்தை சேர்ந்த சிவபாண்டியனுக்கு, சத்யா என்ற மனைவி உள்ளார். சிவபாண்டியன் தினமும் மது குடித்து வந்தார். குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட அவர் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டு கடந்த 2 மாதமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மன உளைச்சலில் இருந்த சிவபாண்டியன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

News October 15, 2025

புதுச்சேரி: டிகிரி போதும்..அரசு வேலை!

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி : Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே <<>>CLICK செய்க.
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!