News October 25, 2024
வறுமையைப் போக்கும் ஓதனவனேஸ்வரர்

திருவையாறு சப்தஸ்தானத்தில் அன்னத் தலமான திருச்சோற்றுத்துறை ஓதனவனேஸ்வரர் கோயில் அப்பரால் பாடப் பெற்ற தலமாகும். கௌதம மகரிஷிக்காக வயலில் நெல்லுக்கு பதிலாக அரிசியை விளைவித்து அருள் புரிந்த இந்த திருத்தலத்திற்கு விஜயாலய சோழன் திருப்பணி செய்துள்ளார். இங்குள்ள ஓதனவனேஸ்வரர் – அன்னபூரணியை விரதமிருந்து அபிஷேகம் செய்து, விளக்கேற்றி வணங்கினால் வறுமை தீர்ந்து, செல்வம் சேரும் என்பது ஐதீகம்.
Similar News
News October 24, 2025
புது வியூகத்துடன் மீண்டும் களத்தில் விஜய்

கரூர் சம்பவத்துக்கு பின் வீட்டிலேயே முடங்கியுள்ள விஜய் மீண்டும் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என அக்கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மக்கள் சந்திப்பு, ரோடு ஷோக்களை தவிர்த்து விட்டு, பொதுக்கூட்டங்களில் மட்டும் பங்கேற்று பேச விஜய் திட்டமிட்டுள்ளார் . மாலை 3 – 5 மணிக்குள் பொதுக்கூட்டங்களை நடத்தி முடிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
News October 24, 2025
கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டக் கூடாது: HC

சென்னை கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், கோயில் நிதியில் இருந்து வணிக வளாகம் கட்ட தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இதில் கட்டுமானத்துக்கு தடை விதிக்க மறுத்த HC, பக்தர்களின் பயன்பாட்டுக்கு மட்டும் கட்டங்களை பயன்படுத்த உத்தரவிட்டது. மேலும் கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டக் கூடாது என TN முழுவதும் உள்ள கோயில்களுக்கும் அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டது.
News October 24, 2025
அதிக பாலோயர்ஸ் கொண்ட நடிகைகள்

திரையுலகில் நடிப்பால் மக்களின் மனதை கவரும் நடிகைகள், இன்ஸ்டாவில் தங்களது போட்டோஷூட், ஃபேஷன் லுக்குகள், உடற்பயிற்சி வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்ந்து இன்னும் அதிகமான ரசிகர்களை பெற்றுள்ளனர். எந்த தென்னிந்திய நடிகை, எவ்வளவு பாலோயர்ஸ் வைத்துள்ளார் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. யாருக்கு அதிக பாலோயர்ஸ்? கமெண்ட்ல சொல்லுங்க.


