News October 25, 2024
ஸ்டாலின் மீது வழக்கு.. அனுமதி கேட்டு ஆளுநரிடம் பாஜக மனு

CM ஸ்டாலின், துணை CM உதயநிதி ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்குத் தொடர அனுமதிகோரி, ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பாஜக மனு அளித்துள்ளது. தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் இந்த மனுவை அளித்துள்ளார். அதில் அவர், அரசியல் சாசனத்தின் கீழ் நியமிக்கப்படும் ஆளுநரையும், அப்பதவியையும் அவமதிக்கும் வகையில், 2 பேரும் பேசியுள்ளதாகவும், இனவெறி கருத்துகளை பரப்பி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News November 13, 2025
ஷமி ஏன் அணியில் இல்லை? கேப்டன் சுப்மன் கில் பதில்!

ஷமி ஏன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசியுள்ளார். தற்போது அணியில் உள்ள பவுலர்கள் சிறப்பாக செயல்படுவதாக கூறிய அவர், வருங்காலத்தில் ஷமி அணியில் இடம் பெறுவாரா என்பதற்கு அணி தேர்வாளர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்றார்.
News November 13, 2025
எல்லாரும் தீவிரவாதிகள் அல்ல: ஒமர் அப்துல்லா

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்ச்சியாக கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம்களாக உள்ளனர். இந்நிலையில், காஷ்மீரில் வாழும் அனைத்தும் முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல என்று அம்மாநில CM ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். டெல்லி தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர், நாட்டின் அமைதியை குலைப்பதற்கென சிலர் உள்ளதாக குறிப்பிட்டார்.
News November 13, 2025
தமிழ் நடிகர் மரணம்.. நெஞ்சை உலுக்கிய சோகம்

‘கொள்ளி வைக்க ஒரு ஆள் வேண்டாமா?’ என்ற வார்த்தையின் வலியை அபிநய்யின் இறுதிச்சடங்கு உணர்த்திவிட்டது. இறுதிச்சடங்கு செலவை தாம் ஏற்க நேரிடுமோ என்ற எண்ணத்தில், உறவினர்கள் கூட இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லையாம். இப்படி ஒரு கொடுமையான முடிவா நமக்கு என்று அபிநய்யின் ஆத்மா எண்ணிய நேரத்தில், KPY பாலா உள்ளிட்ட சிலரின் முயற்சியால், தூரத்து உறவினர் ஒருவரை வரவழைத்து கொள்ளி வைத்துள்ளனர்.


