News March 18, 2024

திருச்சி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு.!

image

திருச்சி ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, திருச்சியில் 9 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்(ம)85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு அஞ்சல் வழியில் வாக்களித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே,
இந்தவாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தெரிவித்துள்ளார்.

Similar News

News September 17, 2025

திருச்சி To டெல்லிக்கு நேரடி விமான சேவை

image

திருச்சியில் இருந்து டெல்லிக்கு நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவையை இன்றிலிருந்து தொடங்கிய நிலையில், திருச்சி விமான நிலையத்தில் விமான பயணிகள் மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

News September 17, 2025

திருச்சி: விதைப்பண்ணை பதிவு செய்ய அழைப்பு

image

திருச்சி மாவட்டத்தில், விதைப்பண்ணை பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் ஆதார நிலை விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலோ அல்லது தனியார் விதை விற்பனை நிலையங்களிலோ வாங்கி, அதற்கான ரசீதுடன் பதிவு கட்டணம் ரூ.25, விதை மாதிரி பரிசோதனை கட்டணம் ரூ.80, வயலாய்வு கட்டணம் ஒரு ஏக்கருக்கு ரூ.100 செலுத்தி விதை சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என உதவி இயக்குநர் நளினி தெரிவித்துள்ளார்.

News September 17, 2025

பாலக்காடு – திருச்சி விரைவு ரயில் ரத்து

image

பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு டவுன் – திருச்சி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலக்காடு டவுன் – திருச்சி விரைவு ரயிலானது இன்று (செப்.17) மற்றும் செப்.22 ஆகிய தேதிகளில் திருச்சி – கஞ்சிக்கோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் பாலக்காடு டவுன் – கஞ்சிக்கோடு இடையே மட்டும் இயங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!