News October 25, 2024
அக்.27 ஞாயிற்றுக்கிழமை நியாய விலைக் கடைகள் இயங்கும்

தீபாவளியை முன்னிட்டு, வரும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து நியாய விலைக் கடைகளும், பகுதிநேர ரேஷன் கடைகளும், அன்றைய தினம் முழுவதுமாக செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் நியாய விலைக் கடையில் தேவையான பொருட்களை தவறாமல் வாங்கி கொண்டு தீபாவளியை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்!
Similar News
News February 14, 2026
செங்கை: பைக் வாங்க ரூ.50,000 மானியம்

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <
News February 14, 2026
செங்கை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 14, 2026
செங்கை: 50 பேர் அதிரடி கைது!

மாற்றுத்திறனாளிகளுக்கு மற்ற மாநிலங்களில் உதவித்தொகை யாக ரூ.6 ஆயிரம், கடுமையானவர்களுக்கு ரூ.10ஆயிரம், படுக்கையில் உள்ளவர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதே போன்று தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று கூறி மதுராந்தகம் தேரடி தெருவில் மாற்றுத் திறனாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் மாநிலம் தழுவிய 4வது நாளாக தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர்.


