News March 18, 2024
தென்காசியில் எடப்பாடி சூறாவளி சுற்றுப் பயணம்!

தமிழகத்தில் 19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், (மார்ச்.27) தென்காசி மாவட்டத்தில் முதல் கட்டமாக, தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
Similar News
News October 29, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (29.10.2025) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100-ஐ தொடர்பு கொள்ளலாம்.
News October 29, 2025
தென்காசி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

செங்கோட்டை – தாம்பரம் இடையே வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் வரும் நவ. முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும், கூடுதலாக ஒரு ஏசி, 2 அடுக்கு பெட்டி, 2 ஏசி 3 அடுக்குபெட்டி, மூன்று இரண்டாம் வகுப்பு பெட்டி, 1 பொதுப்பெட்டி ஆகியவை இணைக்கப்பட உள்ளது. ஏப்ரல் மாதம் வரை தற்காலிகமாக இது அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 29, 2025
தென்காசி: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…


