News October 25, 2024
அண்ணாவின் பொன்மொழிகள்

* எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக் கொள்ளுங்கள் * பகுத்தறிவை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்த மனிதனிடம் வாதிடுவது, செத்துப் போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும் * நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி, நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் * கண்டனத்தை தாங்கிக் கொள்ளும் திடமனது இல்லையென்றால், கடமையை நிறைவேற்ற முடியாது. SHARE IT
Similar News
News August 13, 2025
3 நாள்கள் தொடர் விடுமுறை.. இன்று முதல் சிறப்பு பஸ்கள்

ஆக.15, 16, 17-ல் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்வோர் ரயில்கள், பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதேபோல், தமிழக அரசும் <<17375212>>சிறப்பு பஸ்களை<<>> அறிவித்துள்ளது. கடைசி நேர சிரமத்தை தவிர்க்கும் வகையில் இதுவரை சுமார் 70,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். நீங்க கிளம்பியாச்சா?
News August 13, 2025
பாசமும், மரியாதையும்.. ரஜினிக்கு கமல் வாழ்த்து

‘எங்களைப் போன்று (கமல், ரஜினி) நண்பர்கள் சினிமாவில் இருந்ததில்லை, இனி இருக்கப் போவதுமில்லை’ என்று கமல்ஹாசன் கூறியது இன்றும் இருவரது ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் சூப்பர் ஸ்டாரை பாசத்துடனும், மரியாதையுடனும் கொண்டாடுவதாக கமல் பாராட்டியுள்ளார். ‘கூலி’ படமும் மாபெரும் வெற்றி பெற அவர் வாழ்த்தியுள்ளார்.
News August 13, 2025
வெறும் 7 நிமிடங்கள் தான்.. கேன்சருக்கு புதிய வகை ஊசி!

ரோச் நிறுவனத்தின் கேன்சர் சிகிச்சைக்கான Atezolizumab (Tecentriq) என்று மருந்துக்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருந்து உடலின் நோய் எதிர்ப்பு செல்களை தூண்டி, கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது. முன்பு இந்த மருந்தை உடலில் செலுத்த 60 mins தேவைப்பட்டது. ஆனால், புதிய Atezolizumab-ஐ வெறும் 7 mins-ல் செலுத்தலாம். இதனால் ஹாஸ்பிடல் செலவும் கூட குறையுமாம்.