News October 25, 2024

செங்கல்பட்டில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 25) ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளதாக ஆட்சியர் ச.அருண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம்.

Similar News

News February 8, 2026

தாம்பரம்: திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

image

பயணிகளின் வசதிக்காக திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் (06190) சேவை வரும் பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் இயங்கும் இந்த ரயில், மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். குறைந்த கட்டணத்தில் (ரூ.120 – ரூ.160) முன்பதிவு வசதியுடன் கூடிய இந்தச் சேவையைத் தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பயணிகள் இனி வரும் நாட்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

News February 8, 2026

செம்மஞ்சேரி: தகராற்றில் ஒருவருக்கு கத்தி குத்து

image

செம்மஞ்சேரி சுனாமி நகரைச் சேர்ந்த சிவா (30) என்பவர், நேற்று முன்தினம் தனது மனைவியைக் காணச் சென்றபோது அங்கு சூர்யா (22) என்பவரைச் சந்தித்ததில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சூர்யா, சிவாவை கத்தியால் வயிற்றில் குத்தினார். படுகாயமடைந்த சிவா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சூர்யாவை செம்மஞ்சேரி போலீசார் நேற்று கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 8, 2026

செங்கை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, செங்கை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!