News October 25, 2024

இன்றே கடைசி: ONGCல் 2,236 பணியிடங்கள்

image

ONGCல் அப்ரண்டிஸ் நிலையிலான 2,236 பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே (அக்.25) கடைசி நாளாகும். அக்கவுண்ட் எக்ஸிகியூட்டிவ்ஸ், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் உள்ளிட்ட பதவிகள் காலியாக இருப்பதாகவும், 10, 12, ஐடிஐ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள 18-24 வயதுடையோர் www.ongcapprentices.ong.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News January 22, 2026

திருப்பூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

திருப்பூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>’Tamil Nilam’<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News January 22, 2026

அரசியலில் ‘விசில்’ சின்னத்தின் வரலாறு

image

அரசியலில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் விஜய்யின் தவெகவிற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் சுயேச்சைகளுக்கு வழங்கப்பட்ட ‘விசில்’ இன்று பொதுச் சின்னமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கர்நாடகாவில் 2019-ல் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், தமிழகத்தில் 2021-ல் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகர் மயில்சாமிக்கும் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.

News January 22, 2026

4 நாள்கள் தொடர் விடுமுறை

image

4 நாள்கள் தொடர்ச்சியாக வங்கிகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஜன.24 (4-வது சனி), ஜன.25. (ஞாயிறு), ஜன.26 (குடியரசு தினம்) ஆகிய 3 நாள்கள் ஏற்கெனவே விடுமுறையாகும். இந்நிலையில், வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே பணி வழங்கக்கோரி ஜன.27-ம் தேதி வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். அதனால், வங்கிக்கு சென்று முடிக்க வேண்டிய பணிகளை நாளைக்குள் முடித்துவிடுங்கள் நண்பர்களே!

error: Content is protected !!