News October 25, 2024

JUST NOW: “டானா” தீவிர புயல் கரையை கடக்க தொடங்கியது

image

“டானா” தீவிர புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. வங்கக்கடலில் உருவான அந்த புயல் நேற்றிரவு தீவிர புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து, வடக்கு, வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து வந்தது. இந்நிலையில் அந்த புயல் ஒடிசாவின் புரி, மேற்குவங்கத்தின் சாகர் தீவுக்கு இடைப்பட்ட பகுதியில் தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. அது, இன்று காலை வரை கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 8, 2025

மைக்கில் பேசினால் மன்னரா? பொன்முடிக்கு ஐகோர்ட் கேள்வி

image

மைக் முன் பேசினால் மன்னர் என நினைத்துவிடக் கூடாது என பொன்முடிக்கு எதிரான வழக்கில் சென்னை ஐகோர்ட் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது. சைவம், வைணவம் தொடர்பாக ஆபாசமான முறையில் பேசிய Ex அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல்வாதிகள் பொது இடங்களில் யோசித்து பேச வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். இந்த விவகாரத்தால்தான் பொன்முடி தனது பதவியை இழந்தார்.

News July 8, 2025

கடவுள் ராமர் எங்கள் நாட்டில் பிறந்தவர்… நேபாள PM!

image

நேபாள PM கே.பி.சர்மா ஒலியின் கருத்து சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. வால்மீகி எழுதிய ராமாயணத்தின் அடிப்படையில் ராமர் தங்களது நாட்டில்தான் பிறந்தார் என்று அவர் கூறியுள்ளார். மேலும், சிவனும் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். போலியாக அயோத்தியை ப்ரமோட் செய்வதாக அவர் இந்தியாவையும் விமர்சித்துள்ளார். இவரின் கருத்து குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?

News July 8, 2025

சங்கீதா இருக்கும் இடத்தில் த்ரிஷா.. வைரல் போட்டோ

image

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களான விஜய், த்ரிஷா ஆகியோர் குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் வெடிக்கும். சமீபத்தில், விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து த்ரிஷா வெளியிட்ட போட்டோவும் பேசுபொருளானது. இந்நிலையில், விண்டேஜ் லுக்கில் இருவரும் இருக்கும் போட்டோ வைரலாகி கோலிவுட் பற்றி எரிந்தது. ஆனால், இது AI மூலம் உருவாக்கப்பட்ட போட்டோ என்றும், அதில் இருப்பது அவரது மனைவி சங்கீதா என்பதும் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!