News October 25, 2024
புழுங்கல் அரிசிக்கு இனி ஏற்றுமதி வரி கிடையாது

புழுங்கல் அரிசி, பட்டைத்தீட்டப்படாத பழுப்பு அரிசி மற்றும் நெல்லுக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் 10% வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது விலக்கு தரப்பட்டதுடன் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட், மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் MLA தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணைய அனுமதியுடன் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 15, 2026
விபத்தில் 6 பெண்கள் பலி.. பொங்கல் நாளில் சோகம்!

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் கார் – லாரி மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த 6 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 3 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகர சங்கராந்தி விழாவுக்கு(வட மாநிலங்களின் பொங்கல்) பதேபூருக்கு சென்றபோது விபத்து நிகழ்ந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.
News January 15, 2026
ஜனநாயகத்தை வழி நடத்தும் பெண்கள்: PM மோடி

இந்தியாவின் முக்கியமான தூணாக பெண்கள் மாறிவிட்டதாக காமன்வெல்த் மாநாட்டில்(CSPOC) PM மோடி பேசியுள்ளார். இந்தியாவின் பெண்கள் ஜனநாயகத்தில் பங்கேற்பது மட்டுமல்லாமல் அதை வழிநடத்துவதாகவும் குறிப்பிட்ட அவர், நாட்டின் ஜனாதிபதியே ஒரு பெண் தான் என்றார். மேலும், அனைவரையும் உள்ளடக்கிய இந்த போக்கே இந்திய ஜனநாயகத்தில் பலமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
‘பிளாக் ஃபாரஸ்ட் கேக்’ பெயர் எப்படி வந்தது தெரியுமா?

உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பப்படும் ஒரு கேக் வகை, பிளாக் ஃபாரஸ்ட். 20-ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் உருவான இந்த கேக்கிற்கு, ஏன் இந்த பெயர் தெரியுமா? தென்மேற்கு ஜெர்மனியில் உள்ள ‘பிளாக் ஃபாரஸ்ட்’ மலைப்பகுதியில் விளையும் செர்ரியில் இருந்து தயாரித்த ‘கிர்ஷ்வாசர்’ என்ற பிராந்தியை கொண்டே இந்த கேக் தயாரிக்கப்படுகிறது. இதனாலேயே இவை ‘பிளாக் ஃபாரஸ்ட் கேக்’ என அழைக்கப்படுகிறது. உங்களுக்கு பிடிக்குமா?


