News October 24, 2024
நன்றி கெட்ட மனிதரை விட நாய்கள் மேலடா

மலேசியாவில் ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கார் விபத்தில் படுகாயம் அடைந்த கணவன் படுத்த படுக்கையானார். மனம் தளராத அவரது மனைவி 6 ஆண்டுகள் அவரை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். அண்மையில் உடல்நலம் தேறிய கணவன், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு பெண்ணை மணந்துள்ளார். அந்த பெண்ணோ, ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என கணவனை வாழ்த்தினாலும், ‘நன்றி கெட்டவன்’ என அந்நபரை நெட்டிசன்கள் திட்டுகின்றனர்.
Similar News
News February 4, 2026
பிப்ரவரி 4: வரலாற்றில் இன்று

உலகப் புற்றுநோய் நாள் *1747–தமிழறிஞர் வீரமாமுனிவர் நினைவு நாள் *1895–நாடக நடிகர் பி.ஏ.சுப்பையா பிள்ளை பிறந்தநாள் *1943–பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் பிறந்தநாள் *1974–இயற்பியலாளார் சத்தியேந்திர நாத் போஸ் நினைவு நாள் *1985–பதிப்பாசிரியர் மே.வீ.வேணுகோபாலன் நினைவு நாள் *2004–பேஸ்புக் தொடங்கப்பட்ட நாள் *2023–பாடகி வாணி ஜெயராம் நினைவு நாள்
News February 4, 2026
BLOCK செய்த காதலன்.. குத்திக் கொன்ற காதலி

சத்தீஸ்கரை சேர்ந்த கம்தா பிரசாத், ரோஷினி இன்ஸ்டாவில் அறிமுகமாகி காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் சர்ச்சை ஏற்படவே, வாட்ஸ் ஆஃப்-ல் ரோஷினியை கம்தா பிரசாத் ப்ளாக் செய்துள்ளார். வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது வீட்டிற்கு ரோஷினி கத்தியுடன் சென்றுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிட, ஆத்திரமடைந்த ரோஷினி கத்தியால் குத்தியதில் கமதா பிரசாத் துடிதுடித்து உயிரிழந்தார்.
News February 4, 2026
வக்கீலாக மாறும் CM மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட SIR பணிகளின் அடிப்படையில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இது பாஜகவின் சதி என சாடும் அம்மாநில CM மம்தா பானர்ஜி, சுப்ரீம் கோர்ட்டில் SIR மற்றும் ECI-க்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், அவரே நேரில் ஆஜராகி வாதாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் சிட்டிங் CM ஒருவர் வழக்கில் வாதாட இருப்பது இதுவே முதல்முறையாகும்.


