News October 24, 2024
JUSTIN: சென்னையில் பேருந்துகள் இயங்கவில்லை

சென்னை அண்ணா ஆர்ச் அருகே மாநகர பேருந்தில் பயணியுடன் ஏற்பட்ட தகராறில் ஓட்டுநர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மதுபோதையில் பயணித்த கோவிந்தனிடம் டிக்கெட் எடுக்க கூறியபோது ஏற்பட்ட தகராறில் ஓட்டுநர் ஜெகன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தை அடுத்து, சென்னையில் மாநகர பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்துகள் இயங்காததால், பயணிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
Similar News
News February 5, 2026
தர்ணாவில் ஈடுபடுவேன்: ராஜமெளலி

தான் இயக்கும் ‘வாரணாசி’, 3 மணிநேரம் ஓடக்கூடிய ஒரே பாகமாக மட்டுமே வெளியாகும் என ராஜமெளலி தெரிவித்துள்ளார். படம் வெளியாவதற்குள் இந்தியாவில் போதிய IMAX திரைகள் வந்துவிடுமா என்ற கேள்விக்கு, நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட இடத்தின் முன்பு தர்ணா செய்வது வழக்கம். அதன்படி இந்தியாவில் நிறைய IMAX திரைகள் உருவாக்க சொல்லி US-ல் உள்ள IMAX அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபடுவேன் என்றார்.
News February 5, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: மடியின்மை
▶குறள் எண்: 602
▶குறள்:
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
▶பொருள்: குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
News February 5, 2026
ஹிந்தி திணிப்பு கிருமியை கட்டுப்படுத்தணும்: கனிமொழி

சிவகாசி ரயில் நிலைய பெயர்ப்பலகையில், தமிழ் எழுத்துக்களை மாற்றி ஹிந்தியை இடம்பெறச் செய்தது சர்ச்சையாகியுள்ளது. தனது X பதிவில் கனிமொழி, சென்னை பூங்கா ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தற்போது சிவகாசியிலும் ஹிந்தியை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதாக சாடியுள்ளார். மேலும், நோய்த்தொற்றை போல ஊரெங்கும் பரவிடும் ஹிந்தி திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.


