News October 24, 2024
இந்த வாரம் OTTயில் வெளியாகும் படங்கள்

தியேட்டரைப் போலவே OTTயிலும் படங்களை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக வாரந்தோறும் புதிய படங்கள் OTTயில் வந்தவண்ணம் உள்ளன. இந்த வாரம் (நாளை) மெய்யழகன் -நெட்ஃபிளிக்ஸ், கடைசி உலகப் போர் -அமேசான், கோழிப்பண்ணை செல்லத்துரை -சிம்பிளி சௌத், ஹிட்லர் – டெண்ட்கொட்டா, ஒயிட் ரோஸ் -சிம்பிளி சௌத், சத்யபாமா – ஆஹா, ஐந்தாம் வேதம் – ஜீ 5 ஆகிய படங்கள் வெளியாகின்றன.
Similar News
News October 26, 2025
கழுத்து வலியை விரட்டி அடிக்க சில டிப்ஸ்

கழுத்து வலி, கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. கழுத்து வலி என்பது இன்று பலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்னையாக உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், எளிய முறையில் விரட்டியடிக்கலாம். கழுத்து வலியை போக்க, என்னென்ன செய்யலாம் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு தெரிந்த டிப்ஸை கமெண்ட்ல சொல்லுங்க.
News October 26, 2025
Cinema Roundup: ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா?

*’LIK’ படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல். *‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி நடிக்கிறாராம். *ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘தனுஷ் 55’ படத்தில் ‘பைசன்’ கேமராமேன் எழில் அரசு இணைந்துள்ளார். *ஏ.எல்.விஜய் இயக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
News October 26, 2025
அதிமுக கைகட்டி வேடிக்கை பார்க்காது: EPS

சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் குடியிருப்புகளை கட்ட அரசு அனுமதி கொடுத்துள்ளதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு அரணாக இந்த சதுப்பு நிலங்கள் திகழ்வதாகவும், மக்களின் உயிரோடு திமுக அரசு விளையாடுவதை ஏற்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், இதை அதிமுக கைகட்டி வேடிக்கை பார்க்காது என்றும் கூறியுள்ளார்.


