News October 24, 2024

இந்தியா அபார வெற்றி

image

NZ அணிக்கு எதிராக IND மகளிர் அணி 59 ரன்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. இன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த IND 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய NZ, இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 168 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் ராதா யாதவ் 3, சீமா தாக்கூர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Similar News

News January 22, 2026

ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வந்தாச்சு அப்டேட்

image

<<18909138>>ஜன நாயகன் மேல்முறையீட்டு<<>> வழக்கில் 2 நாள்களுக்குள் தீர்ப்பை எதிர்பார்க்கலாம் என தவெக வழக்கறிஞர் கூறியிருந்தார். ஆனால், இவ்வழக்கு மெட்ராஸ் HC உத்தரவு பிறப்பிப்பதற்காக இதுவரை பட்டியலிடப்படாமல் உள்ளது. சனி, ஞாயிறை தொடர்ந்து குடியரசு தின விடுமுறை (ஜன.26) வருவதால் ஜன.27-ல் தீர்ப்பு வழங்கப்படலாம். அதன்பிறகே, ஜன நாயகன் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

News January 22, 2026

திருப்பரங்குன்றத்தில் பாஜக போட்டியா?

image

2026 சட்டமன்ற தேர்தலில் மூத்த பாஜக தலைவர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த தகவல் கசிந்துள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசையும், திருப்பரங்குன்றம் தொகுதியில் ராம சீனிவாசனும் போட்டியிடுவதற்கு பாஜக தலைமையுடன் ஆலோசித்துள்ளனராம். ஆனால் திருப்பரங்குன்றம் MLA-ஆக ராஜன் செல்லப்பா உள்ளதால், அத்தொகுதியை பாஜகவுக்கு அதிமுக விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News January 22, 2026

பண மழை கொட்டும் 5 ராசிகள்

image

தை மாதம் 8-ம் நாள் சதுர்த்தி விரத தினமான இன்று, குருவின் பார்வையை பெறுகிறார் சந்திரன். கூடுதலாக சூரியன், புதன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களும் ஒரே ராசியில் இணைய வலிமையான சதுர்கிரஹி யோகம் உண்டாகிறது. இன்று உண்டாகும் இந்த சுப யோகங்களின் சேர்க்கை ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம் ராசியினருக்கு லட்சுமி தேவியின் ஆசியையும், எதிர்பார்த்த பண வரையும் கொண்டு வரும் என்பது ஐதீகம்.

error: Content is protected !!