News March 18, 2024
கொ.ம.தே.க வேட்பாளர் அறிவிப்பு

நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் சூரியமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். கொமதேக-வின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளரான சூரியமூர்த்தி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News September 6, 2025
50 கேட்கும் பாஜக; 20-க்கு OK சொன்ன அதிமுக?

2026 தேர்தலில் 50 தொகுதிகளை குறிவைத்து பாஜக காய்நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இப்போதைக்கு வருவாய் மாவட்டங்களுக்கு ஒரு தொகுதி என 40 தொகுதிகளின் பட்டியலை கொடுத்து அதில் 20 தொகுதிகளை டிக் செய்ய அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். இதுகுறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் ஒருவர், நாங்கள் இம்முறை அதிக MLA-க்களை பேரவைக்கு அனுப்பும் நோக்கிலேயே தேர்தலை சந்திக்க உள்ளோம் என கருத்து கூறியுள்ளார்.
News September 6, 2025
ஜெயலலிதாவின் தொகுதியில் கால் பதிக்கும் விஜய்

தவெக தலைவர் விஜய், தனது முதல் தேர்தல் பரப்புரையை வரும் 13-ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் தொடங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து N.ஆனந்த், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஏற்கெனவே 2 மாநில மாநாடுகளை வெற்றிகரமாக முடித்துள்ள போதிலும், தேர்தல் பரப்புரை களத்தில், அதுவும் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம்(2011-ல்) தொகுதியில் முதல் முறையாக விஜய் கால் பதிக்க உள்ளார்.
News September 6, 2025
மோசமான பட்டியலில் இருந்து தப்பினாரா முருகதாஸ்?

இந்த ஆண்டு, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுக்கு மிகவும் மோசமானதாகவே அமைந்தது. ஷங்கர், மணிரத்னம், லோகேஷ் என அனைவரும் சறுக்கினர். இந்த லிஸ்ட்டில் நாமும் இணைந்துவிடக் கூடாது என ‘மதராஸி’ பட புரமோஷனில் AR முருகதாஸ் உள்பட படக்குழுவே அதிகமாக ஹைப் ஏற்றாமல் இருந்தது. இந்நிலையில், இப்படம் ரிலீஸாகி ஓரளவு நல்ல விமர்சனங்களை பெறுவதால் ARM தப்பித்ததாக கூறப்படுகிறது. நீங்க படம் பார்த்தாச்சா?