News October 24, 2024

ஓசூர் அருகே தரைப்பாலத்தை மூழ்கிய ரசாயன நுரை

image

ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு நான்காயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றில் வரும் தண்ணீரில் அதிகப்படியான கழிவுகள் கலக்கப்பட்டுள்ளதால் சுமார் 5அடி உயரத்திற்கு ரசாயன நுரைகள் பொங்கியபடி வருகிறது. இதனால் நந்திமங்கலம் சாலையில் உள்ள தட்டனப்பள்ளி அருகேயுள்ள தரைப்பாலம் ரசாயன நுரையில் மூழ்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News

News February 13, 2026

கிருஷ்ணகிரியில் தீயில் கருகி பலி!

image

சிங்காரபேட்டை அடுத்த கீழ்மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவர் நேற்று (பிப்.12) வீட்டில் தனியாக இருந்த போது திடிரென மின்கசிவு ஏற்பட்டது. அப்போது பெட் ரூமில் திடீரென தீ பிடித்தது. அதில் ரவியின் மேல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. ரவியின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் ரவியின் கருகிய உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 13, 2026

கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள KRP அணையில் இன்று (பிப்.13) நீர்மட்டம் 49.3 முதல் 49.35 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52 அடி ஆகும். மேலும் தொடர் மழை மற்றும் நீர்வரத்து காரணமாக அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

News February 13, 2026

கிருஷ்ணகிரியில் தூக்கிட்டு தற்கொலை!

image

மத்திகிரி அடுத்த அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு தொடர் குடிபழக்கம் இருந்துள்ளது. இதனால் இவருடைய குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு சில தினங்களுக்கு முன்பு அவருடைய மகள் தனியாக சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சீனிவாசன் நேற்று (பிப்.12) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!