News October 24, 2024
கனடா PM ராஜினாமா செய்ய அக்டோபர் 28 வரை கெடு

கனடா PM ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ய வேண்டும் என அவரது சொந்த கட்சி MPக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். காலிஸ்தான் ஆதரவாளர் நிஜ்ஜார் கொலைக்கு இந்தியா தான் காரணம் என ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார். இதனால் அதிருப்தியடைந்த MPக்கள், அவருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், 28ஆம் தேதிக்குள் அவர் பதவி விலகாவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என பகிரங்கமாக எச்சரித்துள்ளனர்.
Similar News
News August 11, 2025
ராகுல், கனிமொழி உள்ளிட்டோர் கைதுக்கு விஜய் கண்டனம்

டெல்லியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிராகப் <<17368703>>போராடிய எதிர்க்கட்சி MP-க்கள் <<>>கைதுக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் ஆணிவேரான தேர்தலை நியாயமாகவும், அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாகவும் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சி MP-க்கள் கைதுக்கு எதிராக தமிழகத்தில் இருந்து முதல் நபராக விஜய் குரல் கொடுத்துள்ளார். இது பற்றி உங்கள் கருத்து?
News August 11, 2025
தலைநகருக்கு டெஸ்லா வந்துருச்சு…

டெஸ்லா தனது 2-வது ஷோரூமை டெல்லி ஏரோசிட்டியில் திறந்துள்ளது. 8,200 சதுரடியில் திறக்கப்பட்ட இதன் மாத வாகை 17 லட்சமாம். கடந்த ஜூலை 15-ம் தேதி மும்பையில் டெஸ்லாவின் முதல் ஷோரூம் திறக்கப்பட்டது. ஒரே மாதத்தில் தனது 2-வது கிளையை திறந்துள்ள டெஸ்லா இந்தியாவின் வாகன சந்தையை கைப்பற்றும் நோக்கில் முழுவீச்சில் இறங்கியுள்ளது. இந்தியாவில் ‘Y’ மாடலில் 2 வெர்ஷன்களை டெஸ்லா அறிமுகப்படுத்தியுள்ளது.
News August 11, 2025
செத்து சாம்பலானாலும் தனித்தே போட்டி: சீமான் உறுதி

அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் செய்ய மாட்டேன் என சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். செத்து சாம்பலானாலும் தனித்தே போட்டியிடுவேன் எனவும் அவர் மீண்டும் உறுதிபட கூறியுள்ளார். விஜய் வந்ததால் தனது வாக்கு சதவீதம் குறைத்துவிடும் என்ற பேச்செல்லாம் கூட்டணிக்கு தன்னை தள்ளும் முயற்சி மட்டுமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன் வெற்றியும் தோல்வியும் மக்களுக்கானது என்றும் கூறியுள்ளார்.