News March 18, 2024
நாமக்கல் கொமதேக வேட்பாளர் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19 ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சூர்யமூர்த்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கலில் இருந்து வரும் வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், இரவு 10:50 மணிக்கு 07332 காரைக்குடி – ஹூப்ளி ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, துமகூரு ஹூப்ளி ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட் உள்ளன.
News August 13, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட்.13 ) நாமக்கல் – யுவராஜன் (9498177803 ), ராசிபுரம் – சங்கரபாண்டியன் ( 9655230300), திருச்செங்கோடு – முருகேசன் ( 9498133890), வேலூர் – பொன்குமார் ( 6374802783) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News August 13, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

நாமக்கல்: இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. இருப்பினும், முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல், ஒரு முட்டையின் விலை ரூ.4.90 ஆகவே நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.