News March 18, 2024
காஞ்சிபுரம்: 133 பேர் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 144 நபர்கள் துப்பாக்கி உரிமம் பெற்று வைத்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதி காரணமாக தற்போது 133 நபர்கள் ஒப்படைத்துள்ளதாகவும் , 11 நபர்கள் வங்கி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதால் அதிலிருந்து விலக்கல் கேட்டு கடிதம் அளித்துள்ளதாக தெரிவித்தார்
Similar News
News August 10, 2025
திமுக சார்பில் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்டம் முழுவதும் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட சாலவாக்கம் ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் இன்று (10.08.2025) நடைபெற்றது. இதில் எம்எல்ஏ சுந்தர் கலந்துகொண்டு பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
News August 10, 2025
வாரயிறுதி விடுமுறை: காஞ்சிபுரம் மக்களுக்கு குட்-நியூஸ்

சுதந்திர தினத்தையொட்டி 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் – செங்கோட்டை, சென்ட்ரல் – போத்தனூர், தாம்பரம் – நாகர்கோயில், மங்களூரு – திருவனந்தபுரம் ஆகிய 4 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 14, 16, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. முன்பதிவு தொடங்விட்டதால் உடனே புக் பண்ணுங்க. இந்த விடுமுறையை என்ஜாய் பண்ணுங்க. அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். <<17358989>>தொடர்ச்சி<<>>
News August 10, 2025
எழும்பூர் – செங்கோட்டை சிறப்பு ரயில் 1/3

வரும் 14-ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக செல்லும். 17ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும். <<17358984>>தொடர்ச்சி<<>>