News October 24, 2024

குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு 

image

ஒலையனூர் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் பள்ளிக் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட R.R. குப்பம் கிராமத்தைச் சேர்ந்த துரை அரசன் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) என்பவர் மீது கடந்த 24-09-2024 அன்று உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News January 14, 2026

கள்ளக்குறிச்சி:தை முதல் அன்று செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

image

கள்ளக்குறிச்சி மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
▶அசகளத்தூர் லோகபாலீஸ்வரர் கோயில்,
▶செல்லம்பட்டு விஸ்வநாதசுவாமி கோயில்,
▶பெருமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில்,
▶மகரூர் கைலாசநாதர் கோயில்.
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 14, 2026

கள்ளக்குறிச்சி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News January 14, 2026

உழவர் சந்தையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

image

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்று சமத்துவ பொங்கல் விழா கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் மற்றும் உழவர் சந்தையில் பணியாற்றும் பணியாளர்கள் என பலரும் புது பானையில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.

error: Content is protected !!