News October 24, 2024

நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை தீபாவளியை முன்னிட்டு விழிப்புடன் இருக்க எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு பிரபல கடைகள் பெயரில் லிங்குகளை அனுப்பி குலுக்கல் முறையில் பரிசுகள் அளிப்பதாக தற்சமயம் மோசடி நடைபெறுகிறது. இது போன்ற லிங்குகளை கிளிக் செய்வதோ அல்லது பகிரவோ வேண்டாம். இதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடபடலாம் எனவும், சைபர் கிரைம் தொடர்பான புகார் 1930 அழைக்கவும் காவல்துறை கூறியுள்ளது.

Similar News

News February 11, 2026

நாமக்கல்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

நாமக்கல் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் இங்கே<> கிளிக் <<>>செய்து இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். (SHARE)

News February 11, 2026

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்களின் குறைதீர் கூட்டம் நாளை 12ந் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்பகல் 3.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. அது சமயம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News February 11, 2026

நாமக்கல்: மாற்றம் இன்றி நீடிக்கும் முட்டை விலை

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.25-ஆக விற்பனையாகி வந்தது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (பிப்.10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை மாற்றம் இன்றி நீடிக்கிறது. முட்டை விலை மாற்றம் இன்றி நீடிப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!