News October 24, 2024
ஜவுளி எடுக்க வந்த புதுப் பெண் காதலனுடன் ஓட்டம்

புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் இவருக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இரு வீட்டாரும் இந்திரா காந்தி சிலை அருகே உள்ள ஜவுளி கடையில் ஜவுளி எடுக்க வந்தனர். அப்போது பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு தனது காதலனுடன் இளம்பெண் மாயமானார் புகார்படி ரெட்டியார் பாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை.
Similar News
News September 14, 2025
புதுச்சேரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற செப்.21ம் தேதி நடைபெற உள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் 86 தேர்வு மையங்களில் நடைபெறும் இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை, தேர்வர்கள் <
News September 14, 2025
புதுவை: கடுமையான வயிற்று வலியால் தற்கொலை

புதுவை, கூடப்பாக்கம்பேட் கோபால் (65) இவருக்கு 3 வாரமாக கடுமையான வயிற்று வலி இருந்தது அவர் மகன் கோவிந்தன் அவரை சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்து சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று கோவிந்தன் வேலைக்கு சென்ற நேரத்தில் வயிற்று வலியால் விரக்தியடைந்த கோபால் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த கோவிந்தன் அளித்த புகாரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 13, 2025
காரைக்காலில் ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் இன்று பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனை, கலைஞர் கருணாநிதி புறவழிச்சாலை இணைப்பு சாலைக்கான முதற்கட்ட கல ஆய்வு பணிகளை ஆட்சியர் மேற்கொண்டார். இணைப்பு சாலைகளுக்கு தேவையான முன் கள ஆய்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகளை அறிவுறுத்தினார்.