News October 24, 2024
வெறும் 1 ரன்னில் இந்தியாவுக்கு அதிர்ச்சி

முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்த இந்தியா, 2ஆவது டெஸ்ட்டில் எழுச்சி பெறும் என ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியே மிஞ்சியுள்ளது. முதல் இன்னிங்சை தொடங்கிய IND வெறும் ஒரு ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தது. அதுவும் கேப்டன் ரோகித் விக்கெட். 9 பந்துகளை எதிர்கொண்ட அவர் முட்டை ரன்னில் வெளியேறினார். 15 பந்துகளை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் 1 ரன்னுடன் களத்தில் இருக்கிறார்.
Similar News
News February 2, 2026
₹16 லட்சம் கோடிக்கு முதலீடுகள்: அஸ்வினி வைஷ்ணவ்

பட்ஜெட்டில் ரயில்வேவுக்கு ₹2.77 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இது ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்குகளை நோக்கியது என தெரிவித்துள்ளார். இதில் ₹20,000 கோடி ரயில்வேஸ் மேம்பாட்டுக்கும், பயணிகள் பாதுகாப்புக்கு செலவழிக்கப்படும் என்ற அவர், புதிதாக அறிவிக்கப்பட்ட 7 அதிவேக ரயில் தடங்களால் ₹16 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
News February 2, 2026
எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து மகளை கொன்ற தந்தை

UP-ல், காதல் விவகாரத்தில் 21 வயது மகளை பெற்ற தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலித்தவனை மணம் முடிப்பேன் என அப்பெண் பிடிவாதமாக இருந்ததால் தந்தையும், அண்ணனும் அவரது வாயில் துப்பட்டா வைத்து அடைத்து, கைகளை கட்டி தாக்கியுள்ளனர். மேலும், எலக்ட்ரிக் ஷாக் கொடுத்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணை அடிப்படையில் இருவரையும் கைது செய்த போலீஸ், இது ஆணவக் கொலையா என சந்தேகிக்கிறது.
News February 2, 2026
காமராஜர் பொன்மொழிகள்!

*பணம் இருந்தால்தான் எனக்கு மரியாதை தருவார்கள் என்றால் அந்த மரியாதையே எனக்குத் தேவையில்லை *எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை *நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதும் கதாநாயகன்தான் *சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை! அனைவருக்கும் கல்வியும், உழைப்புக்கான வாய்ப்பும் தந்தால் போதுமானது


