News October 24, 2024

Pink Auto வாங்க ₹1 லட்சம் மானியம்!

image

Pink Auto திட்டத்திற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மகளிரின் பாதுகாப்பிற்காக GPS பொருத்திய 250 ஆட்டோக்கள் வழக்கப்படும் (₹1 லட்சம் மானியம்). கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு, ஓட்டுநர் உரிமம். வயது வரம்பு: 25-45. சென்னையில் உள்ள விதவைகள் & ஆதரவற்ற மகளிருக்கு முன்னுரிமை. விண்ணப்பிக்கக் கடைசி தேதி: நவ 23. கூடுதல் தகவலுக்கு இந்த லிங்க்கை <>கிளிக் <<>>செய்யவும்.

Similar News

News February 1, 2026

அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி!

image

U19 WC பாக்.,க்கு எதிரான சூப்பர் சிக்ஸ் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 253 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய பாக்., அணி 46.2 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்களில் வென்ற இந்திய அணி, அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆஸி., ஆப்கன் & இங்கி., ஆகியவை ஏற்கெனவே அரையிறுதிக்கு தங்கள் இடங்களை உறுதி செய்துள்ளன.

News February 1, 2026

கருப்பு, சிவப்பு, நீலம் ஒளிர வேண்டும்: CM ஸ்டாலின்

image

சமத்துவ சமுதாயம் அமைப்பதே திராவிட இயக்கத்திற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் இருக்கும் ஒரே இலக்கு என்று இந்திய கம்யூ., கட்சியின் நூற்றாண்டு விழாவில் CM ஸ்டாலின் பேசியுள்ளார். கருப்பு, சிவப்பு, நீலம் கொள்கைகள் நிலைபெற வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த ஒற்றுமை தேவை எனக் கூறிய அவர், திமுக, கம்யூனிஸ்ட் இடையிலான இந்த தோழமை பாசிசத்தை, சர்வாதிகாரத்தை வேரறுக்கும் என்றார்.

News February 1, 2026

விஜய் + காங்., கூட்டணி.. முடிவை தெரிவித்த நாஞ்சில் சம்பத்

image

விஜய்யுடன் கூட்டணி வைக்க காங்., விரும்புவதை போல, விஜய்யும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார் என நாஞ்சில் சம்பத் EXCLUSIVE தகவலை தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவை தங்கள் கையில் வைத்திருக்க விஜய் முகமாகவும், முதுகெலும்பாகவும் இருப்பார் என காங்., நம்புகிறது. இக்கூட்டணி அமைந்தால் இரு கட்சிகளுக்கும் லாபம் எனக் கூறிய அவர், விரைவில் விஜய் கூட்டணி முடிவை அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!