News October 24, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 10 மணிக்கு <<14438881>>GK <<>>வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) சத்யமேவ ஜெயதே 2) கொசு 3) 1971 4) இங்கிலாந்து 5) மலைபடுகடாம் 6) டைட்டோனி பறவை 7) National Eligibility Test 8) M.S.சுப்புலட்சுமி. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

Similar News

News February 8, 2026

தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருக்கிறது. ஜன.29-ல் ஒரு சவரன் ₹1,34,400 ஆக விற்பனையான நிலையில், நேற்று ₹1,15,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது 10 நாள்களில் சவரனுக்கு ₹19,040-ஐ குறைந்துள்ளது. தற்போது சர்வதேச சந்தை ஏற்ற, இறக்கமாக இருப்பதால், வரும் நாள்களில் விலையில் மிகப்பெரிய மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

News February 8, 2026

கரும்பு விவசாயி சின்னத்தால் நாதகவுக்கு பாதிப்பு வருமா?

image

நாதகவின் அடையாளமாக இருந்த கரும்பு விவசாயி சின்னம், தற்போது இந்திய குடியரசு கட்சிக்கு <<19075770>>ஒதுக்கப்பட்டதால்<<>>, வரும் தேர்தலில் குழப்பம் ஏற்படுமா என கேள்வி எழுந்தது. ஆனால், அக்கட்சி NDA-ல் அங்கம் வகிப்பதால் தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட வாய்ப்பு இல்லை; அக்கட்சிக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு இல்லாததால், இங்கு தொகுதிகளை ஒதுக்கவும் வாய்ப்பு இல்லை; அதனால் எந்த பிரச்னையும் இல்லை என நாதகவினர் கூறுகின்றனர்.

News February 8, 2026

தொகுதியிலும் ‘V’-ஐ தேடும் விஜய்

image

கட்சி ஆரம்பித்ததில் இருந்தே ‘V’ செண்டிமெண்ட்டை விஜய் விடுவதாக தெரியவில்லை. கட்சி பெயர் முதல் மாநாடு நடத்தும் இடம் வரை ‘V’ வருவது போன்று பார்த்துக்கொள்கிறார். தேர்தலிலும் ‘V’ எழுத்தில் தொடங்கும் தொகுதியில் விஜய் களமிறங்குவதாக கூறப்படுகிறது. சென்னையில் விருகம்பாக்கம், வேளச்சேரி, விக்கிரவாண்டி, வேதாரண்யம் மற்றும் மத்திய மாவட்டங்களில் ‘V’ எழுத்தில் தொடங்கும் தொகுதியை சல்லடை போட்டு அலசுகிறார்களாம்.

error: Content is protected !!