News October 24, 2024
மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

திருப்பத்தூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபத்தில் இன்று மருதுபாண்டியர்களின் 223-வது நினைவு தின அரசு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, கேஆர். பெரியகருப்பன், ராஜகண்ணப்பன் பி.மூர்த்தி, டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
Similar News
News January 28, 2026
சிவகங்கை: பீரோவை உடைத்து நகை திருட்டு

திருப்பாச்சி அருகே முளக்குளம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்சிவகங்கை சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த போது பீரோவில் வைத்திருந்த 23½ பவுன் நகை திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின்பேரின் திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2 தினங்களுக்கு முன்பு திருப்புவனம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
News January 28, 2026
சிவகங்கை: பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி காரைக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறமுடியவில்லை என மன வேதனையில் இருந்துள்ளார். பெற்றோர்கள் ஆறுதல் கூறி வந்த நிலையில் நேற்று காலை வீட்டின் அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 28, 2026
சிவகங்கை: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <


