News October 24, 2024
Cooking Tips: என் சமையல் அறையில்…

➤முருங்கைக் கீரை சமைக்கும்போது, சிறிதளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து சமைத்தால் இலைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும். ➤எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் வாடிப்போன காய்கறிகளை சிறிது நேரம் ஊறவிட்டு எடுத்தால் பசுமையாக மாறிவிடும். ➤வடைக்கு மாவு அரைக்கும்போது, சிறிது தயிர் & தேங்காய் எண்ணெய்விட்டு அரைத்தால் வடை மிருதுவாக இருக்கும். ➤தோசை மாவுடன் வறுத்த ரவாவை கலந்து சுட தோசை மொறு மொறுப்பாக இருக்கும்.
Similar News
News July 8, 2025
கழிவுகளை நீக்கும் லெமன் டீ

*எலுமிச்சையில் உள்ள நுண்சத்துகள் அழற்சியை தடுத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் * இதிலுள்ள பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், தாமிரம் உள்ளிட்ட நுண்சத்துகள் மூளையை சுறுசுறுப்பாக்கி மனம் புத்துணர்வு பெறவும் மனஅழுத்தம் நீங்கவும் உதவுகிறது *வளர்சிதை மாற்ற செயல்பாட்டை ஊக்குவிக்கிறது, கொழுப்பு சேர்வதை தடுக்கிறது, இதனால் எடை குறையும் *உடலின் நச்சுகள், கழிவுகளை நீக்குவதால் நோய்கள் தடுக்கப்படும்.
News July 8, 2025
கில்லிடமிருந்து இங்கி., வீரர் கற்க வேண்டும்: வாகன்

தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி, இங்கி., அணிக்காக விளையாடுவதே ’அதிர்ஷ்டம்’ என விமர்சித்துள்ளார் மைக்கல் வாகன். 56 போட்டிகளில் 31 தான் கிராவ்லியின் சராசரி, சுப்மன் கில் இத்தொடருக்கு வரும்போது 35 என்ற சராசரியில் இருந்தார், தற்போது 42-ஆக உயர்ந்துள்ளது. முதலில் தற்காப்பில் கவனம் செலுத்தி, பின்னர் மோசமான பந்துகளை தாக்கினார். இதனை கிராவ்லி கில்லிடமிருந்து கற்க வேண்டுமென்றார்.
News July 8, 2025
திருப்புவனம் போல் மற்றுமொரு தாக்குதல் நடத்திய போலீஸ்

திருப்புவனம் அஜித் மீது போலீஸ் தாக்குதல் சம்பவம் இன்னும் தணியாத நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. கோவில் இடத்தில் வீடு கட்டுவதற்கு பொன்ராஜ் என்பவர் ஈடுபட்டுள்ளார். இதனை தங்கபாண்டி என்பவர் எதிர்த்துள்ளார். விவகாரம் காவல் நிலையம் சென்றதால், வேடசந்தூர் போலீசார் தங்கப்பாண்டி வீட்டிற்கே சென்று அவருடைய மனைவி, மகனை கடுமையாக தாக்கியுள்ளார்கள்.