News October 24, 2024

கல்லூரி வாலிபால் போட்டியில் இரட்டை தங்கம்

image

தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டிகளில், செங்கல்பட்டு கல்லூரி மாணவர், மாணவிகள் வாலிபாலில் இரட்டை தங்கம் வென்றனர். கடந்த அக்.4இல் தொடங்கிய முதல்வர் கோப்பை மாநில போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற கல்லூரி வாலிபால் பிரிவில் மாணவர், மாணவிகள் என பிரிவுகளிலும் செங்கல்பட்டு இரட்டை தங்கம் வென்றது. இதனால், செங்கல்பட்டு 29 தங்கம், 25 வெள்ளி, 29 வெண்கலம் வென்றுள்ளது.

Similar News

News August 13, 2025

செங்கல்பட்டு மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

செங்கல்பட்டு மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள்.<> இந்த இணையதளத்தில்<<>>, உங்கள் EPIC எண்ணை பதிவிட்டு விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம். ஏதாவது புகார் இருந்தால் அதே இணையதளத்தில் உள்ள அதிகாரிகளை (ERO/BLO) தொடர்பு கொள்ளுங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!

News August 13, 2025

செங்கல்பட்டு கூட்டுறவு வங்கிகளில் வேலை-APPLY NOW

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையில் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலிப் பணியிடங்கள் உள்ளன. செங்கல்பட்டில் 126 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் <>இந்த இணையதளத்தில் <<>>வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு செங்கல்பட்டு கூட்டுறவு சங்கத்தை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள்!

News August 13, 2025

செங்கல்பட்டில் 13,064 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

image

சென்னையை ஒட்டியுள்ள மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற & ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டில் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை செங்கல்பட்டில் 13,064 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் இல்லை. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்!

error: Content is protected !!