News October 24, 2024

முதலமைச்சருக்கு அழைப்பிதழ் நேரில் வழங்கல்

image

திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவரும், மடத்துக்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராமகிருஷ்ணன் தனது இல்ல திருமண விழா அழைப்பிதழை தமிழக முதல்வருக்கு நேரில் வழங்கினார். உடன் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஈஸ்வரசாமி இருந்தனர்.

Similar News

News November 2, 2025

திருப்பூர்: What’s App இருக்கா உஷார்!

image

தமிழகத்தில் 2 வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை What’s App வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்த துறையும் அனுப்புவது கிடையாது. மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்பி மோசடி செய்கிறது. எனவே, உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News November 2, 2025

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த நபர் அதிரடி கைது

image

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தபோது, அவரிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது‌. இதனை தொடர்ந்து கிருஷ்ணகுமார் என்ற இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

News November 1, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 01.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பல்லடம், அவிநாசி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம் ஆகிய பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

error: Content is protected !!