News October 24, 2024
சொத்து தகராறில் தம்பி காருக்கு தீ வைத்த அண்ணன்

குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பெருமாள் நகரை சேர்ந்தவர் விவேக். இவர், தனக்கு சொந்தமான காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இந்நிலையில், விவேக்கின் அண்ணன் விக்னேஷ், நேற்று(அக்.,23) இரவு காருக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். சொத்து தகராறில் காருக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 5, 2025
குமரி: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

1) இந்திய ரயில்வேயில் 2,569 இன்ஜினியர் பணியிடங்கள் (rrbapply.gov.in)
2) எச்.எல்.எல். நிறுவனத்தில் வேலை (lifecarehll.com)
3) தமிழக சுகாதாரத்துறையில் 1,429 பணியிடங்கள் (mrb.tn.gov.in)
4) 12-ம் வகுப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் வேலை (rrbapply.gov.in)
5) நர்சிங் முடித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை (tmc.gov.in)
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 5, 2025
குமரியில் ரீல்ஸ் வெளியிட்ட 5 பேர் மீது வழக்கு

இரணியல் ரயில் நிலையத்தில் 5 இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தில் ஆட்டம் போட்டு வீடியோ பதிவு செய்தனர். இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டம் போட்ட மரிய ஆலன், பரத விசால், லோயன் ரோமாரியோ, சகாய ஜெனிஷா, பிரிட்டோ ஆகிய 5 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
News November 4, 2025
குமரியில் 5394 பேர் காவலர் எழுத்து தேர்வு எழுத உள்ளனர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு 09.11.2025 நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 5394 பேருக்கு தேர்வு ஐந்து மையங்களில் 09.11.2025 காலை 10.00 மணி முதல் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.


