News October 24, 2024
கைபேசி கோபுரங்களில் மின்கலன் திருடிய 5 பேர் கைது

செல்போன் கோபுரங்களில் மின்கலன்கள் திருடியது தொடர்பாக, திருவெண்ணைநல்லூர், வளவனூர், கிளியனூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் தொடர்புடைய, விழுப்புரம் குபேரன் சிட்டி மாலிக், மகாத்மா காந்தி சாலை சௌத்ரி, திண்டிவனம் கோபாலபுரம் நௌசாத் சையிப், வேலூர் சையத் ஜாபர், யாமின் சையிப் ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 5, 2026
விக்கிரவாண்டி அருகே துணிகரத் திருட்டு!

விழுப்புரம்: விக்கிரவாண்டி தாலுகா, பழைய மேலகொந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. ஹோட்டல் மாஸ்டராக வேலை செய்யும் இவர், கேகே நகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் முன்பு தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றவர், திரும்பி வந்து பார்த்தபோது அதனை காணவில்லை. இது குறித்து அவர் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 5, 2026
விழுப்புரத்தில் அதிரடி கைது!

செஞ்சி பைபாஸ் அருகே ஆந்திராவில் இருந்து தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் நேற்று(பிப்.4) செஞ்சி பைபாஸ் அருகில் நின்ற காரை சோதனை செய்தபோது, அதில் இருந்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், குற்றவாளிகளை கைது செய்தனர்.