News October 24, 2024

ஆற்காடு அருகே  22 சவரன் நகை பறிமுதல்

image

ஆற்காடு டவுன் போலீசார் நேற்று இரவு அண்ணா சிலை அருகில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பைக்கில் வந்த மூன்று வாலிபர்களை நிறுத்தி விசாரித்ததில் மேல்விஷாரத்தைச் சேர்ந்த நவீன், ஐயப்பன் மற்றும் 16 வயதுடைய சிறுவன் ஆகியோர் பல்வேறு இடங்களில் திருடியது தெரிந்தது. அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 22 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

Similar News

News August 28, 2025

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

image

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜ், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் மலர்விழி, மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் ராமதாஸ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

News August 28, 2025

ராணிப்பேட்டை: மின்சாரத்துறையில் வேலை!

image

▶️ராணிப்பேட்டை மக்களே, மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் (ம) சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ▶️சம்பளமாக மாதம் ரூ.30,000– 1,20,000 வழங்கப்படும். ▶️ இதற்கு B.Sc, B.E.,B.Tech, M.Tech, ME படித்தோர் விண்ணபிக்கலாம். ▶️ விண்ணப்பிக்க https://www.powergrid.in/ என்ற இணையதளத்தில் 17.09.25-க்குள் விண்ணபிக்க வேண்டும். (இன்ஜினியர் படித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News August 28, 2025

ராணிப்பேட்டை: உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா?

image

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ▶️ ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. ▶️ 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. ▶️ இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். ▶️ இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க <<17539581>>(தொடர்ச்சி)<<>>

error: Content is protected !!