News October 24, 2024

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி நிலவரம்

image

தக்காளி ரூ.50-70, குடைமிளகாய் ரூ 50, கத்திரிக்காய் ரூ 70-80 கருணைக்கிழங்கு ரூ 60, வெண்டைக்காய் ரூ 40, நூக்கல் ரூ 60,உருளைக்கிழங்கு ரூ 40, கேரட் ரூ 50,பீன்ஸ் ரூ100-120 வெங்காயம் ரூ 40-70,சின்ன வெங்காயம் ரூ 50-55, இஞ்சி ரூ80-100, பூண்டு ரூ 250-300 காலிஃப்ளவர் ரூ 25 வாழைத்தண்டு ரூ10-15 கீரை வகைகள் ரூ 10-15 மாங்காய் ரூ 50-60 அவரை 70ரூ ,முருங்கை ரூ 40-50 விற்பனை செய்யப்படுகிறது.

Similar News

News February 19, 2026

அறிவித்தார் ராணிப்பேட்டை கலெக்டர்!

image

ராணிப்பேட்டை வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நாளை (பிப்.20) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் இம்முகாமில், தகுதியுள்ள இளைஞர்கள் தங்கள் சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பைப் பெறலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பாண்ணுங்க!

News February 19, 2026

அரக்கோணத்தில் தூக்கி வீசப்பட்டு பலி!

image

அரக்கோணம், தணிகை போளூர் ரயில்வே கேட்டில் நேற்று (பிப்.18) தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி இறந்த கிடப்பதாக அரக்கோணம் ரயில்வே போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த விசாரணையில் இறந்தவர் அப்பகுதியை சேர்ந்த கீதா (70) என்பது தெரிய வந்தது.

News February 19, 2026

ராணிபேட்டையில் பிஞ்சு குழைந்தை துடித்துடித்து பலி!

image

ஆற்காட்டை சேர்ந்த தம்பதி பாபு- மேகலா. இவர்களது மகன் லட்சன் (3). மேகலா நேற்று (பிப்.18) தான் வேலை செய்து வந்த செய்யாறு கருப்பசாமி கோயிலுக்கு லட்சனை அழைத்து சென்றார். அப்போது கழிப்பிடம் சென்று விட்டு வந்து பார்த்தபோது லட்சன் தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்தான். ஆற்காடு அரசு மருத்துவமனையில் அவன் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து ஆற்காடு டவுன் போலீசர் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!